பார்த்தவை
கேட்டவை
படித்தவை
நினைத்தவை
மற்றவை
தெருவிளக்குகள்: வீதியில் தங்களை விட்டதற்காகவா இந்த விளக்குகள் எரிந்தழுகின்றன!

இசை: காதுகளுக்கு போத்திவிடுகின்ற கௌரவ பொன்னாடை

தாஜ்மகால்: ஷாஜகான் பேர்த்திய பளிங்கு கம்பளத்திற்கு உள்ளே மும்தாஜ் அழகி மூச்சடைத்துக் கிடக்கிறாள்

வெட்டியான்: மரணம் இவனுக்கு வருமானமாக இருந்தது இப்போது இவனே மரணத்திற்கு வருமானமானான்

ரெயில் பாதைகள்: எங்கேனும் எப்படியேனும் சந்திக்க வேண்டும் என ஆசை கொண்டு பல்லாயிரம மைல்களை கடந்து விட்ட ஏமாளிகள்

சவப்பெட்டி: இறந்தது அவர்தானே என்னை ஏன் புதைக்கிறீர்கள்?

காலண்டர்: குறிப்பிட்ட காலம் (நாள், மாதம், வருஷம் )முடிந்தது அந்த தாளை டர் என கிழிப்பதால் காலண்டர் எனப் பெயர் வந்ததோ?

அதுபோதுமே கனவில் ஒருநாள் நான் சிங்கத்தின் பிடரி மயிரைப் பிடித்து உலுக்கினேன். சிங்கம் கேட்டது என்னிடம் "அடேயப்பா! உனக்கு எப்படி இவ்வளவு வீரம் வந்தது?" நான் சொன்னேன் , " நானும் ஆடு சாப்பிடுகிறவன்தானே!" (கண்ணதாசன் குட்டிக்கதைகள்)
© 2011 truelifecentre.org. Copyright & Privacy design: dbs  
Visit Our other Sites - truelifecentre.org  |   key2bible.net